சத்தியமங்கலம் அருகே கொத்தமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளியம்பாளையம் புதூரில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் கலங்கலாக வருகிறது. குழந்தை முதல் முதியவர்கள் வரை இந்த தண்ணீரை குடிக்க வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. சுத்தமான குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?