சுகாதார சீர்கேடு

Update: 2025-11-02 12:15 GMT

சேலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி ஏரிக்கு செல்லும் வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்பால், தண்ணீர் ஏரிக்கு செல்ல முடியாமல் வயல்வெளிகளிலும், குடியிருப்புகளின் அருகிலும் தேங்கி நிற்கிறது. இதனால் இங்குள்ள விவசாயிகள் விளைநிலங்களில் பயிர் செய்ய முடியாமல் பல ஆண்டுகளாக தவிக்கின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் தகுந்த நடவடிக்கை இல்லை. எனவே அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவின்ராஜ், சேலத்தாம்பட்டி.

மேலும் செய்திகள்