கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிஷன் காம்பவுண்ட் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை அருகே புதுப்பிக்கப்பட்ட சாலையின் கீழே பதிக்கப்பட்டுள்ள குழாய் பழுதடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் சாலை சேதம் அடையும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே குடிநீர் வீணாகாமல் தடுக்க குழாயை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.