வீணாகும் குடிநீர்

Update: 2026-02-01 09:18 GMT

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் இருந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், மருந்து கடைகள் உள்ளன. இந்த சாலையின் இடது புறத்தில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மணி, மீனாட்சிபுரம்.

மேலும் செய்திகள்