திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகாம்பூர் பிச்சையம்மன் நகரில் வசித்து வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இப்பகுதியில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த குடிநீர் குழாயில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.