குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2025-11-02 13:51 GMT

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் கள்ளிக்குடி ஊராட்சி மட்டப்பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள 2-வது தெருவில் எராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குடிநீர் குழாயில் தனிநபர் ஒருவர் சட்டவிரோதமாக தனது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொண்டார். இதனால் இப்பகுதி பொதுமக்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்