குடிநீர் வசதி வேண்டும்

Update: 2026-02-15 13:05 GMT

பெரம்பலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். ஆனால் பயணிகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் 2 பஸ் நிலையங்களிலும் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அவர்கள் கடைகளில் காசு கொடுத்து குடிநீர் பாட்டில் வாங்கி குடிக்கின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் 2 பஸ் நிலையங்களிலும் சுத்திகரிப்பு குடிநீர் வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்