கோபி அருகே மேவானி ஊராட்சியில் உள்ள பொது குடிநீர் தொட்டியில் இருந்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு் வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொட்டியில் இருந்த குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.