குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2026-07-19 17:41 GMT

திருப்பூர் செவ்வந்தாம்பாளையம் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு 4-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வந்தாம்பாளையத்தில் இருந்து முத்தணம்பாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் சாலையில் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, தற்போது வெயில் அதிகரித்து காணப்படுவதால் தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-

மேலும் செய்திகள்