சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஓ.புதூர் பகுதிகளில் குடிநீர் குழாய்கள் இருந்தும் நீண்ட நாட்களாக குடிநீர் வரவில்லை. குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் இப்பகுதி மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் சென்று வர வேண்டியுள்ளது. மேலும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.