குடிநீர் வீணாகிறது

Update: 2026-10-04 17:08 GMT

சேலம் மாநகராட்சி 24-வது வார்டு சின்னேரி வயக்காடு பகுதியில் இருந்து சினிமா நகருக்கு செல்லும் வழியில் குடிநீர் குழாய் உடைந்து சுமார் 20 நாட்களுக்கு முன்பு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதுவரை அந்த பள்ளம் மூடப்படாததால் குடிநீர் திறந்து விடப்படும் நேரங்களில் குழாய் பகுதியில் இருந்து வெளியேறும் தண்ணீர் வீணாகி பள்ளத்தில் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தோண்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்.

மேலும் செய்திகள்