திருக்கோவிலூர் அடுத்த அரும்பாக்கம் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்து மஞ்சள் நிறத்தில் வருகிறது. இதனால் அந்த நீரை குடிக்க அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இந்த மாசடைந்த நீரால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுத்தமான குடிநீரை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.