குடிநீர் தட்டுப்பாடு

Update: 2026-07-19 15:41 GMT

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுக் கோம்பை ஊராட்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று குடிப்பதற்காக பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சீரான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எப்போதுதான் நடவடிக்கை எடுப்பார்களோ? என்று அப்பகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்