குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

Update: 2026-07-19 18:35 GMT

செய்யாறு ஒன்றியம் கொருக்கை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அந்தக் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வெகுதூரம் சென்று தண்ணீரை தலையில் சுமந்து வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய முன்வர வேண்டும்.

-தமிழ்செல்வன், விண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்