சுகாதார சீர்கேடு

Update: 2026-02-15 13:36 GMT

அரியலூர் நகரில் உள்ள குறிஞ்சான் குளத்தெருவில் முக்கிய நீர்நிலைகளும், கோவில்களும் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் நகரின் பல பகுதிகளில் கடை வைத்துள்ள அதன் உரிமையாளர்கள் பலரும் தங்களது வீடு மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைகளை இங்குள்ள நீர்நிலைகளுக்கு அருகே கொட்டிவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருவதுடன், நீர்நிலைகள் முழுவதும் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர்நிலைகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்