கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் பாலத்துறை பாசன வாய்க்கால் நொய்யல், வேலாயுதம்பாளையம், தளவாபாளையம், கடம்பன்குறிச்சி வழியாக வாங்கல் வரை செல்கிறது. இந்த பாசன வாய்க்கால் மூலம் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் வாய்க்காலில் ஏராளமான ஆகாயத்தாமரைகள் வளர்ந்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீர் சொல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.