நிலக்கோட்டை தாலுகா முருகத்தூரான்பட்டி அண்ணாநகர் வடக்குத்தெரு பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. மின்மோட்டர் பழுதடைந்ததால் தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தற்போது கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.