கள்ளிமந்தையத்தில் இருந்து கீரனூர் செல்லும் சாலையோரத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்.