கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சாத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததையடுத்து தென்பெண்ணை ஆற்றில் கடந்த சில நாட்களாக கூடுதலாக தண்ணீர் வருகிறது. வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், தொண்டமானூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தென்பெண்ணை ஆற்று கரைஓரங்களில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளித்தும் துணி துவைத்தும் வருகின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்கால் இருக்க ஆற்றின் கரை ஓரத்தில் குளிக்கவோ, துணி துவைக்க கூடாது என்று அறிவுறுத்துவது மட்டுமல்லாமல், ெவள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
சிவா, வாணாபுரம்.