காவேரிப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொண்டாபுரத்தைச் சேர்ந்த வாசுகி நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அந்த மக்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை. குடிநீரை தொலைதூரத்தில் இருந்து எடுத்து வரும் நிலை உள்ளது. இல்லையெனில், கேன் வாட்டரை தான் விலை கொடுத்து வாங்கி குடிக்க வேண்டும். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வாசுகிநகர் பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.மோகன், காவேரிப்பாக்கம்.