ராணிப்பேட்டையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சந்தை கூடுகிறது. இச்சந்தையில் காய்கறிகள் மட்டுமல்லாமல், ஆடுகள், மாடுகள், கோழிகள் உள்ளிட்டவைகளும் வியாபாரம் செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் சந்தையில் பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் வசதி இல்லை. கால்நடைகளும் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றன. பொதுமக்களின் நலன் கருதி வாரச்சந்தையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
-கஜேந்திரன், ராணிப்பேட்டை.