தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது அகரம்பள்ளிப்பட்டு கிராமம். இங்கு வசிக்கும் மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்கள் ஆகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரி ெசய்ய ேவண்டும்.
-சிவா, அகரம்பள்ளிப்பட்டு.