வேலூர் சைதாப்பேட்டை பழனியாண்டவர் கோவில் பின்பக்கம் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வினியோகிக்கும் போதெல்லாம் தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆற்காடு சாலையிலும் குடிநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சொல்வோர் மற்றும் சாலையோரம் நடந்து செல்பவர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.