சேலம் மாநகராட்சி 19-வது வார்டு சூரமங்கலம், ஜலால் தெருவில் சுமார் பல ஆண்டுகளுக்கு முன்பாக மின்மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இதன்மூலம் அந்த பகுதி மக்கள் குடிநீரை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மின்மோட்டார் இயங்காமல் பழுதடைந்து உள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த தொட்டி அருகிலேயே குப்பை கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மோட்டாரை சரி செய்து மீண்டும் தண்ணீர் வினியோகம் செய்யவும், அந்த பகுதியில் குப்பைகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பெருமாள், சூரமங்கலம், சேலம்.