மழைநீர் செல்ல வடிகால் வசதி

Update: 2022-08-20 16:42 GMT

சேலம் மாவட்டம் பெரிய கொண்டலாம்பட்டி ரெயில்வே பாலம் பகுதியிலுள்ள வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. வடிகால் வசதி இல்லாததால் கடந்த ஒரு மாதகாலமாக தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடனே இருக்கின்றனர். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மழைநீரை அகற்றி, மேலும் மழைநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ரேகன், பெரிய கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்