நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் தட்டுபாடு உள்ளது. இதனால் பெண்கள் குடிநீருக்காக பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் ,வாழ்மங்கலம்