சேலம் தாரமங்கலம் பத்ரகாளியம்மன் கோவிலில் தெப்பக்குளம் ஒன்று உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தரும் இடம் இது. இங்கு சரியான பராமரிப்பு இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் குளத்தில் கலந்து குளம் மாசுபடுகிறது. எனவே சமந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குளத்தை சுத்தப்படுத்த வேண்டும்.
-மயில்பிரகாசம், சேலம்.