கரைகள் பலப்படுத்தப்படுமா?

Update: 2022-08-15 14:34 GMT


தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே கல்லணை கால்வாய் கரைகள் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையில் நடந்து செல்வோர் மிகவும் அச்சப்படுகின்றனர். தற்போது தண்ணீர் அதிக அளவில் செல்வதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆற்றின் இருகரையும் சீரமைத்து பலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழவஸ்தாசாவடி 

மேலும் செய்திகள்