அதிகாரிகள் கவனிப்பார்களா?

Update: 2022-08-14 16:22 GMT

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பெரியார் வளைவு அருகில் சங்ககிரி மெயின் ரோட்டில் ஜெகதீசன் செட்டிகாடு தெருவுக்கு செல்லும் வழியில் சாக்கடை கால்வாய் பாலம் அமைந்துள்ளது. அந்த பாலத்தின் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. அந்த பாலத்தில் கான்கிரீட் அமைக்க ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. ஆனாலும் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் அந்த தெருவுக்கு செல்லும் பெயர் பலகை சாய்ந்த நிலையில் அதனை சுற்றி ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவகுமார், தாதகாப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்