வண்ணான் குளத்தில் நீர் நிரப்ப வேண்டும்

Update: 2022-08-14 13:07 GMT


நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் வண்ணான் குளம் உள்ளது. இந்த குளத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் உள்ளது. மேலும் குளத்தில் மழை நீருடன், சாக்கடை போல் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குளத்தில் நீர் நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்.

மேலும் செய்திகள்