சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜல்லிபட்டி, செஞ்சேரிமலையில் உள்ள பிரதான பி.ஏ.பி. வாய்காலில் தண்ணீர் பக்கெட்டுகளில் எடுத்து கரைமேல் வாகனங்களை நிறுத்தி சிலர் கழுவுகின்றனர். இவ்வாறு, கழுவப்படும் தண்ணீர் வழிந்து மீண்டும் வாய்காலில் கலக்குகிறது. இதனால், தண்ணீர் மாசு அடைகிறது. இதனை தடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வருவார்களா?