சேலம் மாவட்டம் வாழப்பாடி ஏ.டி.சி. டெப்போ ரோடு பிள்ளையார் கோவில் பின்புறம் எழில்நகர் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது. இது குறித்து பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரிசெய்தால் குடிநீர் வீணாவதை தவிர்க்கலாம்.
-பிரேமா, வாழப்பாடி, சேலம்.