நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி பிராவாடையான் ஆற்றுப்பாலம் வழியாக நாகூர்,நாகப்பட்டினம்,வேளாங்கண்ணி, தலைஞாயிறு,வேதாரண்யம் வரை செல்லும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில மாதங்களாக குடிநீர் வீணாகி ஆற்றில் கலந்து வருகிறது.இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
பொதுமக்கள், திருமருகல்.