மழைநீர் வெளியேற்றப்படுமா?

Update: 2022-08-04 16:53 GMT

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி 51-வது வார்டு பெரிய கொண்டலாம்பட்டி ரெயில்வே பாலம் அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் விஷப்பூச்சிகள் புகுந்து தொல்லையாக இருக்கிறது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் இதே நிலை தான் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

-பாபு, கொண்டலாம்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்