குடிநீர் வசதி வேண்டும்

Update: 2022-08-04 11:59 GMT


நாகை மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இதனால் இந்த ஊராட்சியில் குடிதண்ணீர் பிரச்சினை பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், உம்பளச்சேரி.

மேலும் செய்திகள்