நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருமருகல்.
====================