குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா ?

Update: 2022-08-02 13:19 GMT


நாகை மாவட்டம் கீழ்வேளூர், ஒன்றியம் ,கூத்தூரில் இருந்து நாகைக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பைப் லைனில் குடி நீர் எடுத்து செல்லப்படுகிறது. அகரகடம்பனூர் ஊராட்சி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களாக உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீிர் சாலையில் வழிந்தோடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக குடிநீர் குழாயில் உள்ள உடைப்பை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்

அகரகடம்பனூர்

மேலும் செய்திகள்