நாமக்கல்-திருச்சி சாலை என்.புதுப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க கட்டிடத்தின் முன்பு லேசான மழை பெய்தால் கூட மழைநீர் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இதனால் கூட்டுறவு கட்டிடத்திற்கு முன்பு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே கூட்டுறவுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிவேல், நாமக்கல்.