Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Oct 2022 1:42 PM GMT
| பொள்ளாச்சி
#19125

தெருவிளக்குகள் பராமரிக்கப்படுமா?

மின்சாரம்

பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் இருந்து கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த சாலையில் உள்ள தெருவிளக்குகள் சரிவர ஒளிருவதில்லை. மேலும் ரேஷன் கடை பகுதியில் தெருவிளக்கு தலைகீழாக இருப்பதால் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் பெண்கள், குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:21 AM GMT
| உதகமண்டலம்
#19085

பழுதடைந்த பஸ்கள்

போக்குவரத்து

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் இருந்து மஞ்சூர், குன்னூர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் மிகவும் பழுதடைந்து உள்ளன. அவற்றின் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், மழை பெய்யும்போது தண்ணீர் ஒழுகுகிறது. இதனால் அதில் பயணிக்கும் பொதுமக்கள் நனைந்து கொண்டே செல்ல வேண்டி உள்ளது. இதன் காரணமாக அவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அரசு பஸ்களின் மேற்கூரைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 11:17 AM GMT
| குன்னூர்
#19082

வாகன ஓட்டிகள் அவதி

சாலை

கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகள் நேர்த்தியாக போடப்பட்டு இருப்பினும், மழையின் காரணமாக சாலையின் ஒரு சில இடங்கள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. அதில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியுடன் சென்று வருகின்றனர். எனவே நகரின் முக்கிய சாலைகளை புதுப்பிக்காவிட்டாலும், பழுதடைந்துள்ள இடங்களில் உடனடியாக பராமரிப்பு பணிகளை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 6:08 PM GMT
| நத்தம்
#8618

நிழற்கு குடை அமைக்க வேண்டும்

மற்றவை

நத்தம் சாலையில் ஐ.டி.ஐ. கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 2:47 PM GMT
| சென்னை
#6395

சாலையில் குப்பைகள்

சாலையில் குப்பைகள்குப்பை

சென்னை பெசன்ட் நகர் 3-வது தெருவில் உள்ள சாலையில் குப்பைகள் நிரம்பியுள்ளது. இதனால் அந்த பகுதியே அசுத்தமாக காட்சியளிக்கிறது. குப்பைகள் அகற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Aug 2022 1:44 PM GMT
| குன்னூர்
#6332

மின்கம்பிகள் மேல் படர்ந்த செடிகள்

மின்கம்பிகள் மேல் படர்ந்த செடிகள்மின்சாரம்

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின் புறம் செல்லும் சாலையோரம் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து அவ்வழியாக செல்லும் மின்கம்பிகள் மீது படர்ந்துள்ளன. மழை நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள செடிகளை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நந்தகுமார், கோத்தகிரி.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 4:41 PM GMT
| மதுரை வடக்கு
#6232

குடிநீரில் கலக்கும் சாக்கடை நீர்

கழிவுநீர்

கடந்த சில நாட்களாக மதுரை பகுதியில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியது. மேலும் சாக்கடை நீர் செல்ல வழி இல்லாததால் அந்த பகுதியில் உள்ள குடிநீர் மற்றும் நிலத்தடி நீரில் கலந்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்ந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:16 PM GMT
| பெங்களூரு
#6176

சாலையோரம் வீசப்படும் மதுபான பாட்டில்கள்

சாலையோரம் வீசப்படும் மதுபான பாட்டில்கள்சாலை

பெங்களூரு குமரகுருபா சாலை அருகே சிக்னல் உள்ளது. அந்த சிக்னல் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ்பகுதியில், மது அருந்துவோர் மது பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதனால் உடைந்த பாட்டில்கள் பாதசாரிகளின் கால்களை பதம் பார்க்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுப்பதோடு மதுபாட்டில்களை வீசாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:16 PM GMT
| பெங்களூரு
#6175

சிதிலமடைந்து கிடக்கும் நடைபாதை

மற்றவை

பெங்களூருவில் இஸ்ரோ லே-அவுட் பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள நடைபாதையில் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. சில பகுதிகள் முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. இதனால் பாதசாரிகள் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாமல் அவதி அடைகின்றனர். மேலும், அவர்கள் நடைபாதையில் தவறிவிழுந்து காயம் அடையும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடைபாதையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:16 PM GMT
| பெங்களூரு
#6174

குப்பை கழிவுகள் வீசுவது தடுக்கப்படுமா?

குப்பை கழிவுகள் வீசுவது தடுக்கப்படுமா?குப்பை

பெங்களூரு ராஜாஜி நகர் 64-வது கிராஸ் சாலை அருகே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் அருகில் உள்ள சாலையோர மின்கம்பம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட் தடுப்பு வைக்கப்பட்டது. நீண்ட நாட்கள் ஆகியும் அந்த தடுப்பு அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் சிலர், அங்கு குப்பை கழிவுகளை கொட்டி செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த தடுப்பை அகற்றி குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:16 PM GMT
| பெங்களூரு
#6173

நடைபாதையில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள்

போக்குவரத்து

பெங்களூரு ஆர்.டி.நகர் பகுதியில் உள்ள நடைபாதையை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் பாதசாரிகள், நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
4 Aug 2022 3:15 PM GMT
| பெங்களூரு
#6172

நடைபாதையில் கிடக்கும் இரும்பு கம்பிகள்

நடைபாதையில் கிடக்கும் இரும்பு கம்பிகள்சாலை

பெங்களூரு தன்வந்திரி சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் அருகில் உள்ள நடைபாதையில் பல நாட்களுக்கு முன்பு இரும்பு கம்பிகள் போடப்பட்டன. ஆனால் இதுவரை அந்த கம்பிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் பாதசாரிகள் நடைபாதையை விட்டு இறங்கி சாலையில் நடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அந்த இரும்பு கம்பிகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick