மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் நத்தம் ஊராட்சி திருநின்றியூர் காலனி தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. மேலும் இந்த தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய இயலாத காரணத்தால் குடிநீரில் மாசு கலந்து வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடனே அப்புறப்படுத்தி புதிய நீர் தேக்க தொட்டி கட்டிதரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜசேகரன், திருநின்றியூர்.