சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி ஊராட்சி ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதை தவிர்க்க குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.