கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் வீரராகவபுரம் தெருவில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி பராமரிப்பின்றி மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. தொட்டியில் உள்ள தூண்கள் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி உள்ளது.எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.