போடிநாயக்கன்பட்டி ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2025-12-21 17:35 GMT

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரி 21 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை ரூ.19 கோடி மதிப்பில் தூர்வாரி பூங்கா, நடைபாதை அமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்றது. தற்போது அங்கு புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதை சரியாக போடாததால் சில இடங்களில் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சரிவர தூர்வாராமல் ஏரி கரையை சுற்றிலும் செடிகள் வளர்ந்து ஏரி புதர் போல காட்சி அளிக்கிறது. மக்கள் பயன்பாட்டுக்கு வராமலேயே இப்படி காட்சி அளிக்கிறது. எனவே சேதமான நடைபாதையை சீரமைத்து ஏரியை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்