பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. மேலும் குடிநீரில் அசுத்தங்கள் கலந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.