நாகர்கோவில் ஆம்னி பஸ்நிலையத்தில் எதிரே சாலையின் மறுபுறம் ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகில் சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் வீணாக அருகில் உள்ள கழிவுநீர் ஓடைக்குள் பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜோணி, நாகர்கோவில்.