திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள அரிஸ்டோ ரவுண்டானா அருகே தார்சாலையின் அடியில் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும் தண்ணீர் வெளியேறும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். மேலும் இந்த குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உடைப்பை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.