குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அவலம்

Update: 2025-12-21 18:20 GMT

ஒடுகத்தூர் அருகே ஆசனாம்பட்டு கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்தக் குடும்பங்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வழங்கப்படுகிறது. அந்தக் கிராமத்துக்கு குடிநீர் செல்லும் குழாய் 8 மாதத்துக்கு முன்பே உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. அந்த வழியாகக் கழிவுநீர் கால்வாய் செல்வதால், உடைந்த குடிநீர் குழாய் வழியாக கழிவுநீர் கலந்து வருகிறது. உடைந்த குழாயை சீரமைத்து, சுத்தமான குடிநீர் வினியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவபிரகாஷ், ஒடுகத்தூர்.

மேலும் செய்திகள்