நல்ல தண்ணீர் குளத்தை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-01 10:41 GMT
வாலாஜாபேட்டையில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு மேற்கே நல்ல தண்ணீர் குளம் உள்ளது. அந்தக் குளம் கடந்த காலங்களில் கோவில் பூஜைக்கும், சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது. நாளடைவில் குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் உருவானதால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் நல்ல தண்ணீர் குளத்தில் தேங்கி விடுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கும் நல்ல தண்ணீர் குளத்தைச் சீரமைக்க நகராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழகர், வாலாஜா

மேலும் செய்திகள்