வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் 1-வது குறுக்கு தெரு அருகே உள்ள தெருவில் அடிபம்பு ஒன்று உள்ளது. இதையொட்டி கால்வாய் அமைக்கப்பட்டது. அப்போது அடிபம்பின் தண்ணீர் விழும் குழாய் பகுதி கால்வாய் உள்ளே இருக்குமாறு கட்டப்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் பிடிக்க முடியாத நிலை உள்ளது. அங்கு சாலை அமைக்கப்பட உள்ளது. எனவே அதற்கு முன்பு அந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முத்துவேல், வேலூர்.
-முத்துவேல், வேலூர்.