நாமக்கல் நகராட்சி நிர்வாகம் சார்பில் காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் வீடு, வீடாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருச்செங்கோடு சாலை பிள்ளையார் கோவில் தெரு பிரியும் இடத்தில் நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு உள்ள நிலையில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இது பல மாதங்களாக இதே நிலை தொடர்கிறது. இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சரிசெய்ய வேண்டும்.
-சுப்ரமணி, நாமக்கல்.